தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

வியாழன், 4 ஏப்ரல், 2019


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாறை மாவட்டம் நடாத்தும் 
போதை ஒழிப்பு மாநாடு
==========≠==========≠==========≠==========≠

நம்து நாட்டில் அன்மைக் காலமாக தொடர்ந்து போதைப் பொருட்கள் அதிகம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மக்களில் அதிகமானவர்கள் இந்து போதைப் பாவனைக்கு அடிமையாகி உடல்நலத்தை பெரிதும் அழித்துக் கொள்ள்வோர் குறுகிய ஒரு வயதினறாக காணப்பட்ட காலம் கடந்து தற்போது சிறுவர்கள் தொடக்கம் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள்,  குடும்பத் தலைவர்கள், பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் வரை குடி பலக்கத்திற்கும் ,போதைப் பொருளுக்கும் தன்னை முழுமையாக ஏதோ ஒரு காரணத்தை கூறியாவது பாவிப்பதை பார்க்கிறோம்.

இதனை எதிர்த்து நம் இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் போதை ஒழிப்பை பிரகடனம் செய்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - (SLTJ)  போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக தனது கிளைகள் மூலம் பல பொது இடங்களிலும், பல பாடசாலைகளிலும், பாதை ஓரங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான சுண்டுப்பிரசுரங்கள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்து வந்தது.
அதே போல இலங்கை வரலாற்றில் அதிகூடிய போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு 2019.04.02 திகதி முழுமையாக எரிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாறை மாவட்டம் சார்பாக எதிர் வரும் 2019.04.20 ம் திகதி  மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்  மக்களிடம் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் போதைப் பாவனையை பெரிய அளவில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் போதை ஒழிப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்று சேருமாறு உறவுகலான உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
  விருப்புடன் செயல்பட்டு சிறப்புடன் வாழ்வோம்.
அனைவரும் இது பற்றிய தகவளை மர்றவருக்கு எத்திவைக்கும் படியும் வேண்டிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக