தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அடக்கு முறைக்குள் சிலாவத்துறை மக்களும், ஆதிக்கம் செலுத்தும் கடற்படையும்.

 பகுதி -2

 1990 காலப்பகுதியில் அந்த பிரதேசத்தின் முசலிப் பகுதியின் முக்கிய நகரமாகவும் (முத்து சிலாவத்துறை) என்றும் அழைக்கப்பட்டது.

அங்கு கிட்டத்தட்ட 126 வியாபார தளங்களும் , பிரதேச கோப் சிடியும், ஒரு இந்து கோவிலும், இரண்டு முஸ்லிம் வணக்கஸ்தளமும் (பள்ளிகளும்) இருந்துள்ளமை இங்கு முக்கிய சான்றாக அமைந்துள்ளது.

அரச மற்றும் மத வணக்கஸ்தளங்களும் அங்கு அடக்குமுறைக்குள் பரிக்கப்பட்டு ஆதிக்கம் மூலம் அடக்குவதையும் பார்க்க முடிகிறது.

 முஸ்லிம், இந்துக்கள் போன்றோரின் ஒந்த உடமை காணிகளே இவ்வாறு இராணுவத்தினரால் கைப்பற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது போராட்டில் ஈடுபட்டிருக்கும் சிலாவத்துறை மக்கள் தங்களிடம் இருக்கு அனைத்து காணி உறுதிப் பத்திரங்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரைக்கும் சுமார் இந்து மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் காணிக்கான் 118 உறுதிப் பத்திரங்கள் சேர்ந்துள்ளது. என தங்களது உரிமைக்காக குரல் கொடுக்கும் முக்கிய நபர் தெரிவித்துள்ளார்.

தங்களது காணிகளை இராணுவப்படை அத்துமீறி கைப்பற்றியுள்ள காணிகளை மீட்டித் தறுமாறு அந்த சுற்று வட்ட உரிமை மக்கள் அரசாங்கத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை வைத்தவர்களாக. நாளாந்தம் அவர்களால் நடாத்தப்படும் போராட்டத்தை முடிந்தவரை மக்களுக்கும் அரசாங்க பொறுப்பு தாரிகளுக்கும் கிடைக்கும் வண்ணம் முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்தும் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

 மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப் பட்டவர்களால் மக்களுக்கே ஆபத்தாக முடிந்துள்ளது நிலை நாட்டின் நல்லினக்கத்தையும் அரசன் ந் மீதுள்ள நம்பிக்கையையும் இலக்கச் செய்யும் ஒரு விடயமாகும்.

 நாட்டு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அதை நிறைவேற்றும் வழிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்கள் இதை கவனிக்காமல் இருப்பது கவளைக்குறியது.

மக்கள் மீள் குடியேற்றம் மற்றும் மனித உரிமைகள் தினைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை அவர்களின் இப்போராட்டதினை பகிந்தலிக்குமாறு வேண்டுகிறோம்.

தகவல்
முபாரிஸ் றஷீதி (வவுனியா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக