தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

வியாழன், 4 ஏப்ரல், 2019




🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு*

*கிளை நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கு*

இம்மாத (March /April )
அழைப்பு சஞ்சிகையில் இஸ்லாமிய அறிவை வளர்க்கும் முகமாக பல்வேறுவிதமான போட்டி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது


கிளைகளில் குர்ஆன் மத்ரஸா செய்யும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இப்போட்டி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அதர்கான பதிலையும் எழுதி அனுப்ப ஆர்வமூட்டவும்

🌙🍃🌙🍂🌙🍃🌙🍂🌙🍃🌙🍂🌙🍃🌙🍂🌙🍃
மேலும் ரமழானை முன்னிட்டு மாணவர்களுக்கு என பிரத்தியேகமாக *ரமழான் சிறப்பு கட்டுரைப் போட்டியும்* இம்மாத அழைப்பிதழில் வழங்கப்பட்டுள்ளது.

இது படசாலையில் முதலாம் தவனையின் விடுமுறை காலம் என்பதால்  கட்டுரைகளை எழுத அதிகமான நேரங்கள் இருப்பதால் கிளை நிர்வாகிகள் மற்றும் தாயிக்கள் இதன் அவசியத்தை உணர்த்தி கட்டுரைப்போட்டியில் பங்குபற்ற மாணவ மாணவிகளை ஆர்வமூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 *போட்டியில் பங்கு பற்றுவோர்குக்கு பெறுமதியான பரிசிகளும் உண்டு*


*இப்படிக்கு*
*அழைப்பு ஆசிரியர் குழு*

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாறை மாவட்டம் நடாத்தும் 
போதை ஒழிப்பு மாநாடு
==========≠==========≠==========≠==========≠

நம்து நாட்டில் அன்மைக் காலமாக தொடர்ந்து போதைப் பொருட்கள் அதிகம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மக்களில் அதிகமானவர்கள் இந்து போதைப் பாவனைக்கு அடிமையாகி உடல்நலத்தை பெரிதும் அழித்துக் கொள்ள்வோர் குறுகிய ஒரு வயதினறாக காணப்பட்ட காலம் கடந்து தற்போது சிறுவர்கள் தொடக்கம் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள்,  குடும்பத் தலைவர்கள், பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் வரை குடி பலக்கத்திற்கும் ,போதைப் பொருளுக்கும் தன்னை முழுமையாக ஏதோ ஒரு காரணத்தை கூறியாவது பாவிப்பதை பார்க்கிறோம்.

இதனை எதிர்த்து நம் இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் போதை ஒழிப்பை பிரகடனம் செய்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - (SLTJ)  போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக தனது கிளைகள் மூலம் பல பொது இடங்களிலும், பல பாடசாலைகளிலும், பாதை ஓரங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான சுண்டுப்பிரசுரங்கள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்து வந்தது.
அதே போல இலங்கை வரலாற்றில் அதிகூடிய போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு 2019.04.02 திகதி முழுமையாக எரிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாறை மாவட்டம் சார்பாக எதிர் வரும் 2019.04.20 ம் திகதி  மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்  மக்களிடம் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் போதைப் பாவனையை பெரிய அளவில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் போதை ஒழிப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்று சேருமாறு உறவுகலான உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
  விருப்புடன் செயல்பட்டு சிறப்புடன் வாழ்வோம்.
அனைவரும் இது பற்றிய தகவளை மர்றவருக்கு எத்திவைக்கும் படியும் வேண்டிக் கொள்கிறோம்.



ஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

கடந்த 08.03.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 06.04.2019 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

அன்று பிறை தென்பட்டால் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆகும்.  பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு
011 267 7974 - 077 478 1472 - 077 395 1616 - 072 136 3145

இப்படிக்கு

பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

புதன், 3 ஏப்ரல், 2019



SLTJ கடுகண்ணாவை கிளை நடாத்தும் ஜனாஸா செயல் முறை விளக்கமும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்

காலம் : இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 7ம் திகதி ஞாயிற்றுக் கிழமை

நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 7:30 மணி வரை

இடம் : கலுந்தென்ன தக்கியா பள்ளி முன்னால் சகோ பைஸல் அவர்களின் வீட்டு வலாகம்

தொடர்பு கொள்ள
0773503160, 0778664022, 0755700911

தாகத்தை தீர்ப்பதற்கு SLTJ யினால் இலவச தண்ணீர் விநியோகம்

மக்களின் மனதை வென்ற தாகம் தீர்க்கும் இலவச தண்ணீர் பந்தல்
...........................................................................

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்ப்பாக இன்று 30.03.2019 சனிக்கிழமை முதல் கொழும்பு ஐம்புலாம்பு சந்தியில் தாகம் தீர்க்கும் இலவச தண்ணீர் வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அடிக்கும் வெயிலில் தண்ணீரை கண்டதும் மக்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை இந்த இடத்தில் காணலாம்.

நல்ல ஒரு பணி என்று பலரும் பாராட்டினார்கள்.

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
நபிகள் நாயகம்
நூல்- புகாரி - 7376


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பரபரப்பான விற்பனையில் மார்ச் - ஏப்ரல் மாத அழைப்பு

வெளியீடு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

தொடர்பு கொள்ள SLTJ புத்தக நிலையம்

0774781473, 0774781484

உள்ளடக்கம்

• போதையில்லா நாட்டை உருவாக்குவோம்
• இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல்
• பெண்ணின் ஆடை அமைப்பும் அதிகரித்து வரும் பாலியல் துன்புருத்தல்களும்
• இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா ?
• ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்
• வைரலாக பரவி வரும் பேஸ்புக் ஜோஷியம்
• பல்கலைகழக கலாச்சாரமும் நாம் புரிந்து கொள்ள வேண்டியதும் என்ன ?
• புல்வாமாவில் ஓட்டப்பட்ட இரத்தம் பொறுப்புக் கூறவேண்டியது யார் ?
• பொண்கள் சார்ந்தவை
• கர்ப்பகால நீரிழிவு
• பிராத்தனை எனும் வணக்கம்
• ஜனாஸாவின் சட்டங்கள்
• கப்ரின் மேல் செடி கொடிகளை நடலாமா ?
• இன்னும் ஏறாளமான விடயங்களை உள்ளடக்கியது.......✒✒✒
அடக்கு முறைக்குள் சிலாவத்துறை மக்களும், ஆதிக்கம் செலுத்தும் கடற்படையும்.

 பகுதி -2

 1990 காலப்பகுதியில் அந்த பிரதேசத்தின் முசலிப் பகுதியின் முக்கிய நகரமாகவும் (முத்து சிலாவத்துறை) என்றும் அழைக்கப்பட்டது.

அங்கு கிட்டத்தட்ட 126 வியாபார தளங்களும் , பிரதேச கோப் சிடியும், ஒரு இந்து கோவிலும், இரண்டு முஸ்லிம் வணக்கஸ்தளமும் (பள்ளிகளும்) இருந்துள்ளமை இங்கு முக்கிய சான்றாக அமைந்துள்ளது.

அரச மற்றும் மத வணக்கஸ்தளங்களும் அங்கு அடக்குமுறைக்குள் பரிக்கப்பட்டு ஆதிக்கம் மூலம் அடக்குவதையும் பார்க்க முடிகிறது.

 முஸ்லிம், இந்துக்கள் போன்றோரின் ஒந்த உடமை காணிகளே இவ்வாறு இராணுவத்தினரால் கைப்பற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது போராட்டில் ஈடுபட்டிருக்கும் சிலாவத்துறை மக்கள் தங்களிடம் இருக்கு அனைத்து காணி உறுதிப் பத்திரங்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரைக்கும் சுமார் இந்து மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் காணிக்கான் 118 உறுதிப் பத்திரங்கள் சேர்ந்துள்ளது. என தங்களது உரிமைக்காக குரல் கொடுக்கும் முக்கிய நபர் தெரிவித்துள்ளார்.

தங்களது காணிகளை இராணுவப்படை அத்துமீறி கைப்பற்றியுள்ள காணிகளை மீட்டித் தறுமாறு அந்த சுற்று வட்ட உரிமை மக்கள் அரசாங்கத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை வைத்தவர்களாக. நாளாந்தம் அவர்களால் நடாத்தப்படும் போராட்டத்தை முடிந்தவரை மக்களுக்கும் அரசாங்க பொறுப்பு தாரிகளுக்கும் கிடைக்கும் வண்ணம் முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்தும் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

 மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப் பட்டவர்களால் மக்களுக்கே ஆபத்தாக முடிந்துள்ளது நிலை நாட்டின் நல்லினக்கத்தையும் அரசன் ந் மீதுள்ள நம்பிக்கையையும் இலக்கச் செய்யும் ஒரு விடயமாகும்.

 நாட்டு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அதை நிறைவேற்றும் வழிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்கள் இதை கவனிக்காமல் இருப்பது கவளைக்குறியது.

மக்கள் மீள் குடியேற்றம் மற்றும் மனித உரிமைகள் தினைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை அவர்களின் இப்போராட்டதினை பகிந்தலிக்குமாறு வேண்டுகிறோம்.

தகவல்
முபாரிஸ் றஷீதி (வவுனியா)